ETV Bharat / state

'செய்ய முடியாததையும் செய்து காட்டியவர் ஜெயலலிதா' - அமைச்சர் புகழாரம்

விழுப்புரம்: ஜெயலலிதா மற்ற மாநிலங்களில் செயல்படுத்த முடியாத திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டியவர் என அமைச்சர் சி.வி. சண்முகம் புகழாரம் சூட்டியுள்ளார்.

Jayalalithaa has done the impossible things says minister c v shanmugam

author img

By

Published : Feb 27, 2020, 8:41 AM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா கடந்த 24ஆம் தேதி அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக விழுப்புரம் நகராட்சி திடலில் மாவட்ட மாணவரணிச் செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களுக்கு தையல் மிஷன், எரிவாயு அடுப்பு, கல்லூரி மாணவிகளுக்கு பொது அறிவு புத்தகங்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு, பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் ஊற்றி, அவர்களைக் கொலை செய்த காலத்தில் அவர்களைப் பாதுகாக்க தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சிறப்பாகச் செயல்படுத்தியவர் ஜெயலலிதா. இதற்காகவே அன்னை தெரசா ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பாராட்டினார். மேலும் பெண்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி போன்ற திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தியவர் அவர். மற்ற மாநிலங்களில் செயல்படுத்த முடியாத திட்டங்களை எல்லாம் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டியவர் ஜெயலலிதா" என்றார்.

அமைச்சர் புகழாரம்

இதையும் படிங்க: 39 திமுக எம்.பி.க்களால் 39 பைசாவுக்கும் பிரயோஜன் இல்லை: அமைச்சர் கருப்பண்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.