உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் விழுப்புரத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.