விழுப்புரம் மாவட்டம் நல்லாண்பிள்ளை பெற்றாள் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் இன்று போத்துவாய் கிராமம் அருகேயுள்ள இள கொண்ட மலையில் உதவி ஆய்வாளர் வேலுமணி தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க... பாத்ரூமில் மறைத்து வைத்திருந்த 100 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
அப்போது அந்தப் பகுதியில் 200 லிட்டர் கொண்ட இரண்டு பாரல்களில் 400 லிட்டர் சாரய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் கொட்டி அழிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.