விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது 14 வயது மகள் ஜெயஶ்ரீ. கடந்த 10ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த ஜெயஶ்ரீயை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் (அதிமுக பிரமுகர்கள்- நிகழ்வைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கம்) ஆகியோர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
உடலில் பலத்த காயங்களுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரழந்தார்.
இதையடுத்து, முருகன், கலியபெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆறுதல் கூறவந்தவர்கள் மீது வழக்குப்பதிவு!