ETV Bharat / state

காங்கிரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

author img

By

Published : Apr 2, 2019, 10:05 AM IST

விழுப்புரம்: மதவாதம் என்ற பெயரை சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றி வரும் காங்கிரஸ் கட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

காங்கிரஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். நாட்டின் பாதுகாப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டங்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது என்றார்.

மேலும் சிறுபான்மையினர், கிறிஸ்துவர்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இயக்கம் தமாகா. சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தமாகா பாடுபடும் என்று உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து, மதவாதம் என்ற பெயரை சொல்லி காங்கிரஸ் நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Intro:விழுப்புரம்: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Body:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி துவங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு விழுப்புரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து விழுப்புரம் பாமக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணணை ஆதரித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று (திங்கட்கிழமை) விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது.,

'இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். நாட்டின் பாதுகாப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டங்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது.

சிறுபான்மையினர், கிறிஸ்துவர்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இயக்கம் தமாகா. சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தமாகா பாடுபடும்.

திமுக-காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்த கூட்டணி சந்தர்பவாதத்தின் உச்சக்கட்டம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடக்கூடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தென்னிந்தியாவில் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன? வடமாநிலங்களில் காங்கிரஸின் நிலை என்ன?

மதவாதம் என்ற பெயரை சொல்லி காங்கிரஸ் நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் 1 தொகுதியில் கூட சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்?

நாட்டின் பாதுகாப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமையுமானால், தமிழகத்தின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

நாட்டின் பாதுகாப்பு, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிபடுத்த வேண்டிய தேர்தல். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்

Conclusion:இந்நிகழ்வில் தமாகா விழுப்புரம் மாவட்ட தலைவர் தசரதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.