ETV Bharat / state

“மாணவர்கள் லேப்டாப் கேட்டால் டாடா காட்டுகிறார்கள்”.. செங்கோட்டையன் கடும் விமர்சனம்! - K A Sengottaiyan

திமுக ஆட்சியில் மூன்றரை ஆண்டுகாலம் உருண்டோடி விட்டது, ஆனால் கல்வியில் மாற்றங்களை உருவாக்க முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 11:46 AM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது, “அதிமுக கூட்டத்தில் எல்லோரும் பேசலாம். ஏழை, எளியோர் பேச வாய்ப்புள்ளது. ஆனால் திமுகவில் ராசா மட்டுமே பேசுவார். இங்கு அப்படி இல்லை, யார் வேண்டும் பேசலாம், அது தான் அதிமுக. 2026இல் யாராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

40ஐ பிடித்து விட்டோம், இனி 200 ஐ பிடிக்கப் போகிறோம் என்று சொல்லலாம், ஆனால் நிலைமை மாறியிருக்கிறது. திமுக எம்பி ஆ.ராசா நன்றி தெரிவிப்பு அறிவிப்புக் கூட்டத்தில் 25 பேர் கூட இல்லை என்பதால் மக்கள் மனம் மாறியுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக கூட்டணி தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க: ஊட்டி முதியோர் இல்லத்தில் முறைகேடு? பணம், நகை கையாடல்? 3 பேர் கொண்ட குழு தீவிர விசாரணை!

கடந்த அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு 745 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது மாணவர்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 2.5 லட்சம் மானவர்கள் மட்டுமே பயன்பெறுகிறார்கள் இதனால் ஆண்டிற்கு 200 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது என தெரிவித்தார். மீதமுள்ள 546 கோடி ரூபாய் எங்கே? என கேள்வி எழுப்பிய அவர், இந்த திட்டத்தை எப்படி உருவாக்கி இருக்கிறீர்கள் என திமுக பதில் சொல்ல வேண்டும் என்றார்.

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது 53 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வழங்கினோம். திமுக ஆட்சியில் மூன்றரை ஆண்டு காலம் உருண்டோடி உள்ளது. மடிக்கணினி பற்றி பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம் என கூறுகிறார்கள். கல்வியில் மாற்றங்களை உங்களால் உருவாக்க முடியவில்லை.

லேப்டாப் கேட்டால் டாடா என்று சொல்கிறார்கள். திமுகவிற்கு இதுதான் இறுதித் தேர்தல் என்பதை மறந்து விடக்கூடாது. 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டோம் என கொக்கரித்துக் கொண்டு இருக்காதீர்கள். நாளை அதிமுக ஆட்சி மலரும் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.