விழுப்புரம்: செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் உதவி அலுவலர் மெஹருன்னிஷா திமுக வேட்பாளர் கேஸ் மஸ்தானுக்குச் சாதகமாகச் செயல்படுவதாக முன்னதாகவே பாமக வேட்பாளர் ராஜேந்திரன் மாவட்டத் தேர்தல் அலுவலரைச் சந்தித்துப் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பாமக வேட்பாளர் அவருடைய ஆதரவாளர்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அடுக்கு மொழியெல்லாம் இல்லை ஆபாச மொழிதான் - பரப்புரைக்கு நேர்ந்த பரிதாபம்