விழுப்புரம் : நாடு முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரம் நகரில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மகாராஷ்டிரா கர்நாடகா ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடந்த 10 நாட்களாக ரயில், லாரி் மற்றும் வேன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டங்கள், நகரங்கள் கிராமப்புறங்களிலும் விநாயகர் சிலைகளை அமைத்து வருகின்றனர்.
சிறப்பு பூஜைகளுக்கு பின் செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு விநாயகர் ஊர்வலம் செல்லும் பத்து இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக விழுப்புரம் புதுவை சாலை காந்தி சிலை அருகே,பழைய பேருந்து நிலையம் முன்பு மற்றும் வீரவாளி அம்மன் சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்