வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை (நவம்பர் 25) மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரை பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் நிவர் புயல் காரணமாக மீன்வளத்துறை எச்சரிக்கையை அடுத்து மரக்காணம் பகுதி மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
மேலும், மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: நெருங்கும் ’நிவர்’ புயல் - தற்போதைய நிலை என்ன?