விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு மீனவ குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் அதிகாலை 3 மணி அளவில் ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்போது ராட்சத அலையில் படகு சிக்கியதால், சந்திரன்(58) நிலைதடுமாறி படகிலிருந்து கடலில் விழுந்துள்ளார். கடலில் விழுந்த சந்திரன் மீது படகு மோதியுள்ளது. இதனால் மயக்கம் அடைந்து அவரை சக மீனவர்கள் மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் சந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூனிமேடு கடற்கரை பகுதியில் அடிக்கடி கடலில் சிக்கி உயிர் இழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... உடுமலையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: காரில் வந்த கும்பலுக்கு வலைவீச்சு