ETV Bharat / state

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி: தொண்டர்கள் ஆவேசம்

விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே அதிமுக கொடிகம்பத்தின் கல்வெட்டில் இருந்த முன்னாள் எம்.பி.லட்சமணன் பெயரை அக்கட்சி தொண்டர்கள் கடப்பாரையால் நீக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

admk
admk
author img

By

Published : Aug 18, 2020, 8:51 PM IST

விழுப்புரம் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான இரா.லட்சுமணன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவைப் பொருத்தவரை முன்னாள் மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி.ஹீராசந்த், இவர்களைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆளுமை மிக்கவராக உள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அமைச்சர் சண்முகத்தின் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு மாவட்ட மருத்துவர் அணி செயலாளராக இருந்த மருத்துவர் இரா. லட்சுமணனுக்கு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து லட்சுமணனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லட்சுமணன் மாவட்ட அளவில் தனக்கான செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். கட்சிக்காரர்கள் மத்தியில் லட்சுமணனுக்கு ஆதரவு பெருகியது.

ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், இரா. லட்சுமணனின் அரசியலுக்கு சி.வி.சண்முகம் முட்டுக்கட்டையாக இருந்தார். ஈபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தபோது, லட்சுமணனின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு சிவி. சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சி.வி. சண்முகம் வகித்து வந்த மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி லட்சுமணனுக்கு வழங்கப்பட்டது. ஓ.பிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது முதலில் ஆதரவு அளித்தவர் லட்சுமணன்தான். ஆனால், அவரது பதவி பறிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அமைதிகாத்தது லட்சுமணனுக்கு வெறுப்பை தந்துள்ளது.

இதனால், அதிருப்தியடைந்த இரா. லட்சுமணன் அதிமுக கட்சி தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், விழுப்புரம் இரண்டு மாவட்டங்களாக பிரித்தபோதும் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என நம்பியிருந்தார். அதிலும் பெருத்த ஏமாற்றமடைந்த லட்சுமணன் அதிமுகவிற்கு பாடம் புகட்ட திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் ஆவேசம்

இந்நிலையில், அதிமுகவிலிருந்து லட்சுமணன் விலகினாலும் அதிமுக தொண்டர்கள் அவர் மீதான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆவேசமடைந்த அதிமுக தொண்டர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னக்குப்பம் பகுதியில் அதிமுக கொடிகம்பத்தின் கல்வெட்டில் இருந்த இரா.லட்சுமணன் பெயரை கடப்பாரை கொண்டு தகர்த்தெரிந்தனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: முறப்பநாடு அருகே பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசியதில் தனிப்படை காவலர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.