ETV Bharat / state

விழுப்புரம் : கோழிப்பண்ணைக்குள் வெள்ள நீர் புகுந்து 4000 கோழிகள் இறப்பு!

விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கோழிப்பண்ணையில் வெள்ள நீர் புகுந்து 4000 கோழிகள் உயிரிழந்தன.

விழுப்புரம்
விழுப்புரம்
author img

By

Published : Nov 21, 2021, 4:48 PM IST

விழுப்புரம்: கடந்த ஒரு வார காலமாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாத்தனூர் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீர் திறந்துவிடப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள சின்ன மடம், நரசிங்கபுரம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில் ராமதாஸ், வெங்கடபதி பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வெள்ள நீர் புகுந்து அங்கு வளர்க்கப்பட்டு வந்த 4000 கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இதைக்கண்டு மனவேதனையடைந்த உரிமையாளர்கள் அரசு அலுவலர்கள் கோழிப்பண்ணையைப் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ’பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு குறைப்பு’ - ககன்தீப் சிங் பேடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.