கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளான அம்மையகரம், பூண்டி, வாசுதேவனூர் உள்ளிட்ட பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாயை தற்போது விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஆறு மாதம் கொண்ட இப்பயிர் தற்போது செழிப்புடன் வளர்ந்து அறுவடை செய்யப்படுகின்றன.
ஏக்கருக்கு முப்பதாயிரம் செலவு செய்தால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய்வரை லாபம் ஈட்டலாம் எனக்கூறும் விவசாயிகள் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பச்சை மிளகாய் விலை குறைவாக உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கு தமிழ்நாடு அரசு அமைத்து தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குரூப் 4, குரூப் 2ஏ பணிக்கு இனி 2 எழுத்துத் தேர்வுகள்!