ETV Bharat / state

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

விழுப்புரம்: வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

Voter List
Voter List
author img

By

Published : Dec 23, 2019, 2:23 PM IST

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி இன்று தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இன்று தொடங்கி வைத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் மொத்தம் 26 லட்சத்து 87 ஆயிரத்து 274 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 13 லட்சத்து 44 ஆயிரத்து 72 பேரும், பெண்கள் 13 லட்சத்து 42 ஆயிரத்து 824 பேரும் மற்றவர்கள் 378 பேரும் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் 1950 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். அடுத்தாண்டு ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் தங்கள் பகுதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்" என்றார்.

இதையும் படிங்க: செம்பனார்கோவில் பகுதியில் எம்எல்ஏ பவுன்ராஜ் வாக்கு சேகரிப்பு!

Intro:விழுப்புரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

Body:
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் உட்பட்ட இடங்களில் 01.01.2020 தேதியை ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி இன்று (23.12.2019) முதல் 22.01.2020 வரை செய்யப்பட உள்ளது.

இந்த பணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இன்று துவக்கி வைத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது.,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 23-12-2019 தேதியில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் மொத்தம் 26 லட்சத்து 87 ஆயிரத்து 274 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண்கள் 13 லட்சத்து 44 ஆயிரத்து 72 பேரும், பெண்கள் 13 லட்சத்து 42 ஆயிரத்து 824 பேரும் மற்றவர்கள் 378 பேரும் உள்ளனர்.

வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் 1950 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Conclusion:அடுத்தாண்டு ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் தங்கள் பகுதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றும் கேட்டுகொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.