திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் பரப்புரையை இன்று தொடங்கிய அவர், அங்குள்ள கலைஞர் அறிவாலயத்தில் இளைஞரணி நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், "கடந்த 19 நாட்களாக மாவட்டந்தோறும் பயணித்து வருகிறேன். இதை தொடங்கியபோது பல்வேறு தடைகள், நிபந்தனைகள் விதித்து காவல்துறையினர் என்னை கைது செய்தனர். இருப்பினும் இடைவிடாத எனது பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இளைஞரணி செயலாளராக நான் பொறுப்பேற்ற போது 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஸ்டாலின் கட்டளையிட்டார். தற்போது 4.50 லட்சம் பேரை புதிதாக சேர்த்துள்ளோம்.
மக்கள் தெளிவாக இருக்கின்றனர். ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. அதனை இளைஞரணி நிர்வாகிகள் உறுதி ஏற்று செயல்பட வேண்டும். நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக திமுகவை அங்கீகரித்தது நீங்கள்தான். அதேபோல் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ’பொய் தகவல்களை பரப்புகிறார் முதலமைச்சர்’