நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிரதமரின் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமரின் கிசான் திட்ட நிதி முறைகேட்டில் ஈடுபட்ட மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப்.14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கிசான் திட்டம் முறைகேட்டை கண்டித்தும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை தடைசெய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தொடர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி!