தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப் 6) நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் தொகுதியில் காலை 7 மணிமுதல் தொடங்கி 370 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
காலை 7.15 மணியளவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான க. பொன்முடி, அவரது மகனும் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினருமான பொன். கவுதமசிகாமணி ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர்.
திமுக வேட்பாளர் இரா. லட்சுமணன்
அவரைத் தொடர்ந்து, விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இரா. லட்சுமணன் தனது குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்து, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
தொடர்ந்து முதல் தலைமுறை வாக்காளர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் உற்சாகத்துடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவுசெய்து-வருகின்றனர். காவல் துறையினர், துணை ராணுவத்தினர் வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.