ETV Bharat / state

என் தந்தைக்கு வாய்ப்பளித்தது போல் எனக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்: பொன்.கௌதம சிகாமணி - candidates introduction

விழுப்புரம்: என் தந்தைக்கு வாய்ப்பளித்தது போல் எனக்கும் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான பொன்.கௌதம சிகாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா
author img

By

Published : Mar 18, 2019, 8:35 PM IST

விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும், கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக பொன்.கௌதம சிகாமணியும் அறிமுப்படுத்தப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பொன்.கௌதம சிகாமணி, 30 வருடங்களுக்கு முன் மறைந்த திமுக தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட எனது தந்தைக்கு ஆதரவு அளித்ததுபோல், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அடையாளம் காட்டப்பட்ட எனக்கும் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதைதொடர்ந்து பேசிய ரவிக்குமார், தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய பொன்முடி, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார் என தெரிவித்தார்.

Intro:விழுப்புரம்: என் தந்தைக்கு வாய்ப்பளித்தது போல் எனக்கும் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Body:விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும், கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக பொன்.கௌதம சிகாமணியும் அறிமுப்படுத்தப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பொன்.கௌதம சிகாமணி., '30 வருடங்களுக்கு முன் மறைந்த திமுக தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட எனது தந்தைக்கு ஆதரவு அளித்ததுபோல், தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் அடையாளம் காட்டப்பட்ட எனக்கும் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்' என கேட்டு கொண்டார்.

அதைதொடர்ந்து பேசிய ரவிக்குமார்., 'தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

Conclusion:பின்னர் பேசிய பொன்முடி., 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரமிது. தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார்.எதிர் முகாமில் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். ஆனால் இது உணர்வு பூர்வமாக கூட்டணி' என்றார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.