விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (38). திமுக வட்டச் செயலாளரான இவர், நேற்றிரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் கழுத்தில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் பார்த்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:
தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: கர்நாடகாவில் இருந்து மதுரை விரைந்த போலீஸ்!