டெல்லி படேல் நகரைச் சேர்ந்தவர் நிதின் ஷர்மா (30). அண்மையில் விழுப்புரம் வந்திருந்த இவருக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இவருக்கு கரோனா தொற்று இல்லை எனக்கூறி, சுகாதாரத் துறை அலுவலர்கள் கடந்த 7ஆம்தேதி விடுவித்தனர்.
ஆனால், விடுவிக்கப்பட்டதற்கு அடுத்தநாள் வெளியான ரத்தமாதிரி சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து விடுவிக்கப்பட்ட நிதின் ஷர்மாவை கடந்த 15ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், படாளம் பகுதியிலிருந்து காவல் துறையினர் அழைத்துவந்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த அவருக்கு, கரோனா தொற்று இல்லை எனக்கூறி, இன்று சுகாதாரத் துறை அலுவலர்கள் சாதாரண வார்டுக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
இதையும் பார்க்க: ஒரே மருத்துவமனையில் 31 செவிலியர், 5 மருத்துவர்களுக்கு கரோனா?