விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பகுதியில் பல நாள்களாக மான் கறி விற்பனை நடந்துவருகிறது எனச் சிறப்பு காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று (பிப். 21) கிளியனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மான் கறி விற்கவந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு, சின்னமணி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.
இதில் இவர்கள் அடிக்கடி திருவண்ணாமலை காட்டுப் பகுதியிலிருந்து மான் வேட்டையாடி புதுச்சேரி மாநிலங்களில் விற்பது தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு உதவியாக விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் தேர் குணம் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவரிடமிருந்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து இவர்கள் மூவரும் வனவிலங்கு தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, தலா 25 ஆயிரம் வீதம் என மூவருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.