விழுப்புரம்: வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் வானூர் பகுதியில் நடந்தது.
அப்போது பேசிய அவர், " திமுக ஆட்சிக்கு வரவேண்டும் எனப் பெருவாரியான மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை. நாம் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருப்போம். ஆனால், தோல்வியடைந்ததற்கு காரணம் பாஜக கூட்டணிதான். இதனால், நாம் முழுமையாக சிறுபான்மையினர் வாக்குகளை இழந்துவிட்டோம்.
சிறுபான்மையினருக்கு நம்மீதோ, நமது கட்சியின்மீதோ, நமது பத்தாண்டு கால ஆட்சியின் மீதோ எந்த கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை. அவர்கள் பாஜகவுடன் கொள்கை ரீதியாக முரண்பட்டு இருந்தார்கள். அந்தசமயத்தில், நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியைத் தழுவினோம். அதற்கு உதாரணம் நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதி.
விழுப்புரத்தில் 14ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் நாம் தோல்வியைத் தழுவினோம். விழுப்புரம் நகர்ப்பகுதியில் 16ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. அதில், 300 வாக்குகள்கூட நமக்குவரவில்லை. நகரத்தில் வாக்குகளைப் பெறவில்லையென்றாலும் கிராமத்தில் நல்ல வாக்குகளை நாம் பெற்றோம்.
திமுக மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் நாம் பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் சுறுசுறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருந்து செயல்படவேண்டும். துரோகிகளுக்கு இடம் கொடுக்காமல், விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தடகள வீரர்களுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு