ETV Bharat / state

மத்திய அரசுடன் திமுக கள்ள உறவில் இருக்கிறது - சிவி சண்முகம் - தலைவர் எம்ஜிஆர்

மத்திய அரசுடன் திமுக கள்ள உறவில் இருக்கிறது என்று அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சிவி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம்
author img

By

Published : Oct 18, 2022, 12:49 PM IST

விழுப்புரம்: அதிமுகவின் 51ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், ”தமிழ்நாட்டை ஆளத் தெரியாத மு.க.ஸ்டாலின் ஆண்டு கொண்டிருக்கிறார்.

இவருக்கு திறமை இல்லை. தற்போதைய அறநிலையத்துறை அமைச்சரே, ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது தரமற்ற மருந்துகளை விநியோகம் செய்தார் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திமுகவை சேர்ந்த ஒருவர் இந்து மதத்தை பற்றி ஒருமையில் பேசுகிறார் இது பற்றி அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்டால் காது கேட்கவில்லை என்று சொல்கிறார் கடவுளுக்கும் ஒரு நாள் உங்கள் விஷயத்தில் காது கேட்காமல் போகும்.

சிவி சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம்

தமிழ்நாட்டில் நடைபெறும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை பணிகளில் நடைபெறும் பணிகளை முறைகேடுகளை மறைப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிமொழி எம்.பி க்கு மத்திய அரசிடம் பதவி வாங்கி இருக்கிறார். திமுக மத்திய அரசோடு கள்ள உறவில் இருக்கிறது.

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் தான் ஓபிஎஸ் தற்பொழுது இன்றைக்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நான் தான் தலைவர் எனக் கூறிக் கொண்டு சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கலாம், அப்படி கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாமே சாதிக்க முடியவில்லை.

நடிகர்களை ரசிகர்கள் மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே அதிமுக பல்வேறு கட்ட சாதனைகளை நிறைவேற்றி உள்ளது. ஓபிஎஸ் அதிமுக சின்னத்தை முடக்கியவர். தற்பொழுது அதிமுக சின்னத்தை கொண்டாடும் அளவிற்கு எடுபுடியாக செயல்பட்டு வருகின்றார். அவர் ஒரு எடுபிடி” எனப் பேசினார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் - சபாநாயகர் அப்பாவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.