விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கிடங்கல் கோட்டை ஏரியின் மதகு உடைந்து, தேக்கி வைக்கப்பட்ட நீர் வீணாக வெளியேறி வருகிறது.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த எரி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 400 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த ஏரியின் மூலம் பல ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.
தற்போது ஏரியின் மதகு உடைந்ததால் சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. பாதிக்கப்பட்ட பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொதுமக்களை பாதுகாப்பு முகாமில் தங்க வைக்க அலுவலர்களிடம் அவர் கூறினார். மேலும் ஏரியில் மதகு கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திண்டிவனம் ஏரிக்கரை உடைப்பு... குடியிருப்பில் புகுந்த வெள்ள நீர்!