விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கஸ்பா காரணை என்கிற கிராமத்தில் விதிமுறைகளை மீறி கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. ் அங்கு பாறைகளைத் தகர்க்க வைக்கப்படும் ஜெலட்டின் வெடிகளால் அருகே உள்ள வீடுகளில் விரிசல் மற்றும் மேற்கூரைகளில் பாதிப்பு ஏற்படுவதாகவும், வெடிகள் வெடிக்கும் போது நில நடுக்கம் போன்ற உணர்வை உணர முடிகிறது என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வருவதாகவும் நிலத்தடி நீர் குறைவதால், விவசாயம் சார்ந்த தொழில்கள் முடங்கும் அபாயம் உள்ளதாகவும், மேலும் கல்குவாரிகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் கூறுகின்றனர்.
இதே நிலை நீடித்தால் பொது மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் பிரியாணி விழா சர்ச்சை - திருப்பத்தூர் ஆட்சியருக்கு பட்டியல் மற்றும் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ்