விழுப்புரம் மாவட்ட அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளரும் திண்டிவனம் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவருமான முகமது ஷெரிப் திண்டிவனம் நகர காவல் துறை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், ’திண்டிவனத்தில் வரும் 5ஆம் தேதி தனது மகள் திருமண நிகழ்ச்சிக்கு சசிகலா வருகை தருவதாகவும் இதனை விரும்பாத முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு சசிகலா வருகையைத் தடுக்க திட்டமிட்டுள்ளதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சசிகலா குறித்து காவல் நிலையத்தில் போலியான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ’தனது மகளின் திருமண விழாவிற்கு சசிகலா வருவதை அனுமதிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு தர வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையைப் பார்த்து பலர் பயந்து நடுங்குகின்றனர் - சசிகலா புஷ்பா அதிரடி!