ETV Bharat / state

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 24, 2023, 8:31 PM IST

Updated : Feb 24, 2023, 8:46 PM IST

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாளான 19ஆம் தேதி மயானக் கொள்ளை விழாவும், 23ஆம் தேதி தீ மிதி விழாவும் நடைபெற்றது. அங்காளம்மன் கோயிலின் 7ஆம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு, கோயிலின் வடக்கு வாயிலில் இருந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும், பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேலும் நாளை காலை தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும், 26ஆம் தேதி காலையில் தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் சாமி வீதி உலாவும், 27ஆம் தேதி காலை தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.

இதனையடுத்து 2ஆம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சாமி வீதி உலா, கொடியிறக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் விவகாரம்; மாநில மனித உரிமைகள் ஆணையம் புதிய உத்தரவு

Last Updated : Feb 24, 2023, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.