ETV Bharat / state

'மறைமுகமாக மனுஸ்மிருதியை செயல்படுத்த திட்டம்': ரவிக்குமார் எம்.பி குற்றச்சாட்டு! - விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தி, மனுதர்மத்தை மத்திய அரசு மறைமுகமாக செயல்படுத்த நினைப்பதாக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஆவேசமாக விமர்சித்துள்ளார்.

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 7, 2020, 1:21 PM IST

பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் இன்று (டிச.7) விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தலைமையேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தை கைவிடக்கூடாது, மனுஸ்மிருதியை மறைமுகமாக நடைமுறைப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

நூற்றுக்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய - மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்., "கல்வி உதவித்தொகையை நிறுத்திய மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. மனுதர்மத்தை மத்திய அரசு மறைமுகமாக செயல்படுத்த நினைக்கிறது. இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.