விழுப்புரம்: மயிலம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் (23), சஞ்சய் என்ற ராமலிங்கம் (21). இவர்கள் இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இவர்கள் இருவரும் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் எஸ்பி பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில், மேற்கண்ட கஞ்சா வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் இன்று (ஆக. 28) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது... ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்...