விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெருமுக்கலை சேர்ந்தவர் வாசு என்கிற வாசுதேவன் (27). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஜல்லி கிரஷரில் அவர் வேலை கேட்டுச் சென்ற போது மர்ம கும்பல், அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.