தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய் பரவலின் காரணமாக இன்று (ஏப்ரல்25) முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலுள்ள 19 மீனவ கிராமங்களில் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் நாட்டு படகுகள் மற்றும் கட்டுமர படகுகள் கொண்டு மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக அனைத்து படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவாக்சின் விலை என்ன தெரியுமா?