மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ஜப்தானி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயதேவ் ராவூத். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரத்த தானம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 9 ஆயிரம் கி.மீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கொல்கத்தாவில் ரத்த தானம் குறித்த பரப்புரையைத் தொடங்கிய இவர், ஆந்திரா வழியாக தமிழ்நாடு வந்து சென்னை, திண்டிவனம் வழியாக இன்று விழுப்புரம் வந்தடைந்தார்.
தொடர்ந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி வழியாக கேரளா, கர்நாடகா சென்று அங்கிருந்து வருகிற மார்ச் மாதம் மீண்டும் கொல்கத்தா சென்றடைய உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் இதுவரை 38 முறை ரத்த தானம் அளித்துள்ளதாகவும், கடைசியாக டிசம்பர் 20ஆம் தேதி ஆந்திராவில் ரத்ததானம் வழங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் 2020ஆம் ஆண்டுக்கு பின் ஒருவர் கூட ரத்தப் பற்றாக்குறையால் உயிரிழக்கக்கூடாது என்பதே தனதுகொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடுதான் முதலிடம் - விஜய பாஸ்கர் பெருமிதம்