ETV Bharat / state

குப்பைகளை சேகரிக்க பேட்டரி ஆட்டோக்கள் - கலக்கும் கள்ளக்குறிச்சி நகராட்சி

விழுப்புரம்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் குப்பைகளை சேரிக்க கள்ளக்குறிச்சி நகராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படவுள்ளன.

auto
author img

By

Published : Jul 6, 2019, 12:59 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் மூன்று சக்கர வாகனங்கள் மூலமாக வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி ஆட்டோக்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சோதனை ஓட்ட முறையில் ஆறு பேட்டரி ஆட்டோக்கள் மட்டும் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது மீதம் உள்ள 21 பேட்டரி ஆட்டோக்களையும் விரைவில் செயல்படுத்த உள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பேட்டரி ஆட்டோக்கள்

இந்த பேட்டரி ஆட்டோக்களை இயக்குவதன் மூலம் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் இந்த ஆட்டோக்களில் குப்பைகளை ஏற்றி கொண்டு அதிக வேகத்தில் செல்ல முடியாது என்பதால், குப்பைகள் சாலைகளில் சிதறாமல் எடுத்துவர முடியும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:tn_vpm_02_kallakurichi_municipality_battery_auto_vis_tn10026Body:tn_vpm_02_kallakurichi_municipality_battery_auto_vis_tn10026Conclusion:தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 27 பேட்டரி ஆட்டோக்கள் இயக்கம் !

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கபட்டு அதனை தரம் பிரீக்கபட்டு வருகிறது .இந்த நிலையில் கள்ளக்குறிச்சி யில் உள்ள 21 வார்டுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 டன் அளவிற்க்கு குப்பைகள் சேகரிக்கபடுகிறது.மேலும் குப்பைகளை எடுத்து வர வீடு வீடாக மகளிர் சுய உதவி குழு மூலம் பெண்கள் மூன்று சக்கர வாகனத்தில் எடுத்து வந்தனர்.ஆனால் இப்போது வீடு வீடாக சென்று குப்பைகளை எடுத்து வர தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி ஆட்டோக்கள் பயன்படுத்தபடவுள்ளனர்.இது வரையில் 6 ஆட்டோக்களை இயக்கி குப்பைகள் சேகரிக்கபட்டு சோதனை பார்த்து வந்த நிலையில் மீதம் உள்ள 21 பேட்டரி ஆட்டோக்களையும் விரைவில் செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .இந்த பேட்டரி ஆட்டோவால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருப்பது மடடுமின்றி குப்பைகளை ஏற்றி கொண்டு அதிக வேகத்தில் செல்ல முடியாது என்பதாலும் குப்பைகள் சரியாக எடுத்து வசதியாக இருக்கும் .மேலும் இது போல திட்டங்களுக்கு பொதுமக்கள் பலர் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.