ETV Bharat / state

விழுப்புரத்தில், மின்னல் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு - villupuram 1 die 2 injured in lightning strike

விழுப்புரம்: விழுப்புரத்தில், மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமுற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெண் உயிரிப்பு
author img

By

Published : Nov 4, 2019, 10:36 AM IST

விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23). நித்யாவும், அதேபகுதியைச் சேர்ந்த அஞ்சலாட்சி என்பவரும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது திடீரென இடி தாக்கியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய விசாலாட்சி மீட்கப்பட்டு அவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ஒருகோடி பகுதியைச் சேர்ந்த, செல்வநாயகி என்பவரும் இடிதாக்குதலில் காயமுற்றார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலில் அவருக்கு சொந்தமான இரண்டு மாடுகள் உயிரிழந்தன.

இடி தாக்கி உயிரிழந்த இரண்டு மாடுகள்

மேலும் படிக்க:

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 40 ஆட்டுக்குட்டிகள்!

மின்சாரம் தாக்கி உயிரிந்த தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல்!

Intro:விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் இல் இடி தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Body:விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23).

இவர் இன்று மாலை தளவானூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

அச்சமயத்தில் ஆற்றோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நித்யா மீது இடி தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அதேபகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த, அதே ஊரைச் சேர்ந்த குமரன் மனைவி அஞ்சலட்சி என்பவர் மீது இடி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் ஒருகோடி பகுதியைச் சேர்ந்த செல்வநாயகி என்பவர் இன்று மாலை தோகைபாடி பகுதியில் உள்ள தனது நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இடி தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன.

மேலும் செல்வநாயகி உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Conclusion:இடி தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மற்றும் இரு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது விழுப்புரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.