ETV Bharat / state

புத்தாண்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் - விழுப்புரம் மாவட்டம் செஞ்சி

விழுப்புரம்: புத்தாண்டு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தெரிவித்தார்.

வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்
வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்
author img

By

Published : Dec 29, 2020, 8:38 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு வருகை புரிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜனுக்கு காவல்துறை அணிவகுப்பு செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்
வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் கூறுகையில், "புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, பிரதான சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்டவை மூலம் இந்த ஆண்டு வாகன விபத்துக்கள் இல்லாமல் புத்தாண்டை கொண்டாட வழி வகை செய்யப்பட்டுள்ளது. செஞ்சியில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்
வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன்

சத்தியமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள சென்னாலூர் கிராம மக்கள், தங்களது பிரச்னைக்காக 37 கி.மீ., தூரம் உள்ள கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தை நாட வேண்டியுள்ளது. ஆனால், சத்தியமங்கலம் காவல் நிலையம் 10 கி.மீ., தூரமே உள்ளது. இதேபோல், ஏதாநெமிலி கிராமத்தை வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்துடன் இணைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.