விழுப்புரத்தில் முதலமைச்சர் நிகழ்ச்சி நேற்று நான்கு மணியளவில் தொடங்கப்பட இருந்த நிலையில், பிற்பகல் இரண்டு மணிமுதலே பொதுமக்களும், கட்சியினரும் வரத்தொடங்கினர்.
ஆனால் பல மணி நேரமாகியும், விழா தொடங்கவில்லை. முதலமைச்சர் வருகைக்காக அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் காத்திருந்தனர்.
மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட வண்டிப்பாளையம் அதிமுக கிளை செயலாளர் அய்யாவு (60) நான்குமுனை சந்திப்பில் காத்திருந்தபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காகக் கொண்டுசெல்லப்பட்டது.
இதையும் படிங்க:'அது நானில்லைங்க': சசிகலாவிற்கு ஆதரவு சுவரொட்டிக்கு மறுப்பு சுவரொட்டி!