ETV Bharat / state

"இது ரோடு இல்லை ரோடு மாதிரி.." விமர்சனத்திற்கு ஆளான வீடூர் புதிய சாலை! - வீடூர் அணை கொள்ளளவு

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையின் கரைப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை தரமற்ற வகையில் இருப்பதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Villupuram Veedur dam
வீடூர் அணை
author img

By

Published : Feb 8, 2023, 8:01 AM IST

Updated : Feb 8, 2023, 12:55 PM IST

வீடூர் அணையின் கரைப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை தரமில்லாமல் கையோடு வரும் காட்சி தற்போது இணையத்தில் வைரல்

விழுப்புரம்: மயிலம் அருகே அமைந்துள்ள வீடூர் அணையானது சுமார் 34 கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த வீடூர் அணை மூலமாக விழுப்புரம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் அளவிற்குத் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வீடூர் அணையின் கரைப்பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியானது ரூ.43 கோடி மதிப்பீட்டில் கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்று வருகிறது. கரைப்பகுதியான 5 கி.மீ தூரத்திற்கு தற்போது உள்ள சிமெண்ட் சாலையின் மேலே தார்ச் சாலையானது அமைக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை சார்பாக நடைபெறும் இந்த பணியானது ஏற்கனவே அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையின் மேலே வெறும் ஜல்லி மற்றும் தார்களைக் கொண்டு தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனங்கள் சென்றாலே பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த தார்ச் சாலையானது உரியத் திட்டமிடுதல் இல்லாமல் அமைக்கப்படுவதாகப் குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் தார் சாலையின் அவல நிலை குறித்த உண்மை நிலையை அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் உள்ளூர் கிராமவாசிகள் சிலர் புதிய சாலையை கைகளால் பெயர்த்தெடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் கீழ் ஒரு சிலர் இது சாலை அல்ல; சாலை மாதிரி என கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசி காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்; வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Last Updated : Feb 8, 2023, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.