விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த பூத்தமேடு கூட்ரோடு பகுதியில் ஜெய்சன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தை பறக்கும் படை அலுவலர்கள், காவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது, பேருந்தில் பயணம் செய்த பிரேம் என்பவர் விழுப்புரம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் செல்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து கஞ்சா கடத்திய பிரேமை கைது செய்த காவலர்கள் அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இவர், கடந்த 10 ஆண்டுகளாக பேருந்து மூலம் கஞ்சா கடத்தல் தொழில் செய்துவருவது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கஞ்சா யாரிடம், எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் பறக்கும் படையினர் பறிமுதல்செய்த 3 லட்சம் ரூபாய்