ETV Bharat / state

அம்மா உணவக சாப்பாட்டில் பல்லி? 7 பேருக்கு வாந்தி மயக்கம்!

திண்டிவனம் அம்மா உணவக சாப்பாட்டில் பல்லி இருந்ததாகக் கூறப்படும் நிலையில், 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Dec 13, 2022, 6:53 AM IST

விழுப்புரம்: திண்டிவனம் அருகே செஞ்சி சாலையில் 'அம்மா உணவகம்' அமைந்துள்ளது. இந்நிலையில் வைரபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(40), பாஞ்சாலம், பெலாக்குப்பம், புறங்கரை, ரோசனை ஆகிய பகுதியைச் சேர்ந்த குமரேசன், பிரசாத், வீர கண்ணன், குழந்தைசாமி, ஜெயந்தி, வெங்கடேசன் ஆகியோர் இங்கு தினமும் உணவு சாப்பிட்டுவிட்டு கட்டட வேலைக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில், நேற்று (டிச.12) காலை இவர்கள் வழக்கம்போல இந்த அம்மா உணவகத்திற்கு சென்று சாப்பிட்டனர். இந்நிலையில் ஏழுமலை சாப்பிட்ட தட்டில் பல்லி இருந்ததாகவும், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏழுமலை உடனடியாக அம்மா உணவகத்தில் இருந்த ஊழியர்களிடம் இது பற்றி கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் சமைத்து வைத்திருந்த உணவுகள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகயாக, அந்த தட்டில் பல்லியை பார்த்தவர் உட்பட 7 பேரை திண்டிவனம் அரசு மருத்துவனை சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவர்களுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்டது. போதிய முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மேயர் ஆர்.பிரியா, 'போதிய பராமரிப்பின்றி செயல்படும் மற்றும் செயல்படாத அம்மா உணவகங்கள் மூடப்படும்' என அறிவித்திருந்தார். இந்நிலையில் திண்டிவனத்தில் அம்மா உணவகத்தில் பல்லி விழுந்த சம்பவம் விவாதத்திற்கு உள்ளாகுமா? என கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: உதயநிதி அமைச்சராவதற்குத் தகுதியானவரா? - டி.கே.எஸ் இளங்கோவன் சிறப்பு நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.