விழுப்புரம் மரக்காணம் பகுதியில், புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் நேற்றிரவு மரக்காணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வசிக்கும் நந்தகுமார் என்பவரது வீட்டில் 500க்கும் மேற்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்கள் சிக்கின. அதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், வீட்டின் உரிமையாளர் நந்தகுமாரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட 2,600 மதுபாட்டில்கள் பறிமுதல்