விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்குள்பட்ட வசந்தகிருஷ்ணாபுரம் பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சிவருவதாக அரகண்டநல்லூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் இன்று அப்பகுதியில் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வசந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏரிக்கரை பகுதியில் இருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 500 லிட்டர் புளித்த சாராய ஊறல்களைக் காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
இதையும் படிங்க: '6 ஆயிரம் தாங்க ஓஹோனு வாழ்க்கை' - நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் கைது!