ETV Bharat / state

அதிக வெப்பம்  காரணமாக பற்றியெரிந்த வீடுகள்! - villupuram

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே அதிகப்படியான வெப்பத்தின்  காரணமாக நான்கு வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.

தீயில் எரிந்து சாம்பலான வீடுகள்
author img

By

Published : Jun 9, 2019, 12:19 PM IST

விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூர் அருகே சைலோமிலுள்ள தாசர்புரம் பகுதியில் நேற்று மதியம் 2.50 மணியளவில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. தாசர்புரம் என்ற பகுதியில் ஆறுமுகம், மல்லையன், தண்டபாணி, சிவலிங்கம் ஆகியோர் கூலி வேலை செய்துவருகின்றனர்.

நேற்று மதியம் வீட்டில் இருந்தவர்கள் அருகில் இருந்த வீடுகளுக்கு சென்றுவிட கூரை வீடு என்பதால் அதீத வெப்பத்தின் காரணமாக மதியம் 2.30 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது.

முதலில் மல்லையன் என்பவரது வீட்டில் பற்றிய தீ அருகில் இருந்த ஆறுமுகம், தண்டபாணி, சிவலிங்கம் ஆகியோரின் வீடுகளுக்கு வேகமாகப் பரவியது. தீயைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

தீயில் எரிந்து சாம்பலான வீடுகள்

உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருக்கோவிலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன் அனைத்து வீடுகளும் தீயில் எரிந்து சேதமாகின. மொத்தமாக நான்கு வீடுகளில் இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புத்தகம், நகை, பணம் என மொத்தமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

திருக்கோவிலூர் அருகே 4 வீடுகள் அதிகப்படியான வெப்பத்தின்  காரணமாக எறிந்தது இதில் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சைலோமில் உள்ள தாசர்புரம் பகுதியில் இன்று மதியம் 2.50 மணியளவில் அடுத்தடுத்து 4 வீடுகள் எறிந்து சேதம் அடைந்தது. தாசர்புரம் பகுதியில் உள்ள ஆறுமுகம், மல்லையன், தண்டபாணி, சிவலிங்கம் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று விட கூரை வீடு என்பதால் அதீத வெப்பத்தின் காரணமாக முதலில் மல்லையன் என்பவரது வீடு தீப்பற்றி எரிய தொடங்கியது.

 பின்னர் அருகில் இருந்த ஆறுமுகம், தண்டபாணி சிவலிங்கம் ஆகியோரின் வீடுகளுக்கு தீப்பற்றியது. பின்னர் அக்கம் பக்கத்தினர் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முயற்ச்சி செய்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால்  தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன் அனைத்து வீடுகளும் தீயில் எறிந்து சேதமானது. மொத்தமாக 4 வீடுகளில் இருந்த குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புத்தகம் நகை பணம் என மொத்தமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.