கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமம் உள்ள்து. இந்தக் கிராமத்தில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் செவ்வந்தி என்கிற மகள் உள்ளார்.
இந்நிலையில் குழந்தை நேற்று வழக்கம்போல் மாலை நேரத்தில் வீட்டின் வெளியே உள்ள குளத்தின் ஓரமாக விளையாடி கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து திருநாவலூர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையும் படிங்க: வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு