இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் 31ஆம் வரை தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 136 பேர் கரோனா அறிகுறியுடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 26 பேருக்கு 28 நாள்கள் சிகிச்சை முடிந்துள்ளது. மீதமுள்ள 110 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் நலன் கருதி காய்கறிகள், பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்களை வாங்கும் பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று வாங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், “கர்ப்பிணி பெண்கள், வயதானவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் கவனம் அளிக்க வழிவகை செய்யப்படும். கரோனோ குறித்து கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செவிலியர், மாணவர்கள் அடங்கிய 50 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை: மாநகராட்சிக்கு 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அரசு