ETV Bharat / state

உணவு டெலிவரி செய்யும் இளைஞர் மீது தாக்குதல் - போதை ஆசாமிகள் மீது வழக்கு - போதை ஆசாமிகள்

வேலூரில் சாலையில் சென்ற சொமேட்டோ டெலிவரி இளைஞரை, மது போதையில் இருவர் தாக்கிய சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 27, 2023, 8:22 PM IST

பதறவைக்கும் வீடியோ

வேலூர்: ஒடுக்கத்தூரைச் சேர்ந்த பழனி என்பவரது இளைய மகன் திருமலைவாசன் (22). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலூர் மாநகர் பகுதியில் சொமேட்டோவில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர் நேற்று (ஜன.26) இரவு காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் செல்லும் பகுதியில் உள்ள வெல்லக்கல்மேடு பகுதிக்கு உணவு டெலிவரி செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், தணிகாச்சலம் ஆகிய இருவர் திருமலைவாசனை, சரமாரிமாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக இளைஞரை தாக்கிய பார்த்திபன் என்பவரை பிடித்து காட்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் திருமலைவாசனின் இருசக்கர வாகனம் மீது பார்த்திபன், தணிகாச்சலம் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதனால், அதனை தட்டிக்கேட்ட இளைஞர் திருமலையை மதுபோதையில் இருவரும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் கூறுகையில், ’குடும்பச்சூழல் காரணமாக திருமலைவாசன் கடந்த ஒரு மாதமாக உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று 2 பேர் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார்.

தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். தயவு செய்து அவருக்கு சிகிச்சையளிக்க அரசு உதவ வேண்டும். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: சொத்து பிரச்சனை காரணமாக சகோதரனை கொல்ல முயன்று தற்கொலை செய்துகொண்ட நபர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.