ETV Bharat / state

"ஒரு மணி நேரத்தில் சாகப்போகிறேன்" - வேலூர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை! - ஜாப்ராபேட்டை பகுதி

Young Man Commits Suicide: திருமணமாகாத விரக்தியில் ஒரு மணி நேரத்தில் சாகப்போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாகப்போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 8:42 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா - அமிர்தா தம்பதியினர். இவர்களின் இரண்டாவது மகன் சரத்குமார் (26) கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 26 வயதான சரத்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு திருமணம் செய்து வைக்கக் வேண்டி, தொடர்ந்து பெற்றோரிடம் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர், இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்ற சரத்குமார் வீடு திரும்பாத நிலையில், தனது தங்கைக்கு போன் செய்து தான் இறக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் (WhatsApp Status), தான் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப் போவதாகவும் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதனை அடுத்து, காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சரத்குமாரின் இருசக்கர வாகனமும், கிணற்றில் சரத்குமார் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். காட்பாடி தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்ட விருதம்பட்டு காவல் துறையினர், உடலை உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாகப்போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
சாகப்போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

அதனைத் தொடர்ந்து, தற்கொலைக்கு காரணம் திருமணம் ஆகாத விரக்தி தானா? இல்லை வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கடலூரில் தனியார் பள்ளி வாகனம் தீ பற்றி விபத்து - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.