ETV Bharat / state

நிற்காமல் சென்ற அரசு பேருந்தை சுத்தியல் காட்டி எச்சரித்த பெண் வீடியோ! - vellore govt bus

வேலூரில் அரசுப் பேருந்து ஒன்றை பெண் ஒருவர் சுத்தியல் காட்டி மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 7, 2023, 8:45 PM IST

அரசு பேருந்து ஓட்டுநரை சுத்தியலால் மிரட்டிய பெண்

வேலூர்: குடியாத்தம் பகுதியிலிருந்து நேற்று முன்தினமும் (ஜன.05) இரவு சுமார் 7 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் நோக்கிப் புறப்பட்டது. பின்னர், இரவு 8:30 மணியளவில் ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அதில் பயணம் செய்த பெண் ஒருவர் ‘ஏன் வலைவில் நிறுத்தவில்லை, நான் அங்கு தான் இறங்க வேண்டும்’ என்று நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு, நடத்துநர் ‘அங்குப் பேருந்து நிறுத்தம் கிடையாது, நான்கு முனை சந்திப்பில் தான் நிற்கும்’ என்று எடுத்துக் கூறினார். ஆனால் அதைக் கேட்காத பெண் திடீரென கையில் வைத்திருந்த சுத்தியலுடன், ‘நீங்கச் சம்பளம் வாங்குறீங்கல எனக்கு அந்த இடத்தில் தான் இறங்கனும்’ என்று பேருந்து கண்ணாடியை உடைப்பது போல் ஆவேசமாகப் பேசினார்.

ஆனாலும், அந்த பெண்ணிடம் எவ்வளவு கூறியும் அவரின் கோபம் அடங்கவில்லை. பின்னர், ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதனைக் கவனித்த அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திருச்சி குழந்தை கடத்தல் வழக்கு; தாய் கைது! நரபலியா என தீவிர விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.