வேலூர் மாவட்டத்தில் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் தினந்தோறும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே குழாய் உடைந்ததில் பல லிட்டர் தண்ணீர் வீணானது.
இதை கவனித்த பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பொய்கை திட்டத்தின் கீழ் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பைஞ்சுதை குழாய் உடைந்து அதிலிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.
எனவே உடனடியாக குழாய் உடைப்பைச் சரி செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.