வேலூர், சென்னை, ஆந்திரா மற்றும் போபாலில் வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள விஐடி கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு (VITEEE) நடத்தப்படுகிறது.
இந்த தேர்விற்கான ஆன்லைன் பதிவு செயல்முறை நேற்று(நவ.29) தொடங்கியுள்ளது. VITEEE 2021இல் கலந்துகொண்டு பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்ப செயல்முறையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையின்படி, இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 30, 2021 கடைசி நாளாகும். இந்த தேர்விற்கான விண்ணப்பத்தை மாணவர்கள், வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான viteee.vit.ac.inயில் பூர்த்தி செய்யலாம்.
இந்த நுழைவுத் தேர்வு 2021 ஏப்ரல் 2 அல்லது 3ஆவது வாரத்தில் நடத்தப்படும். மேலும் 2021 மே மாதம் முதல் வாரத்தில் இதற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். மாணவர்களுக்கான வகுப்புகள் 2021 ஜூலை இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமக ஆர்ப்பாட்டம்: கிண்டி - தாம்பரம் பேருந்துகள் நிறுத்தம்