வேலூர்: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் ஏர்கலப்பை சங்கம் பொதுக்கூட்டம் நேற்று (டிச. 28) வேலூரில் நடைபெற்றது.
வேலூர் மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு பொருளாளர் நா.சே. ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கரோனா பரவல் விதியை மீறியது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஆயிரம் பேர் மீது வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பேரம் முடிந்தவுடன் தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் குறித்து பிரதமர் பேசுவார்'